உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமரா

சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமரா

ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், பணியாளர்கள் உரிய நேரத்தில் வருவதைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட உள்ளது. இதற்காக இவற்றின் உள்கட்டமைப்பு குறித்த அறிக்கை பெறப்படுகிறது.தமிழகத்தில், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப நிலையத்தின் கீழ், ஆரம்ப சுகாதார நிலையம், துணை நிலையம் இயங்குகிறது.இங்கு, டாக்டர்கள் எட்டு மணி நேரம், அதாவது காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை பணிபுரிய வேண்டும். ஆனால், குறைந்த நேரம் பணியில் இருந்து விட்டு, உதவியாளர், நர்ஸ் உள்ளிட்டோரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, டாக்டர்கள் புறப்பட்டு செல்வதாக புகார்கள் எழுகின்றன. அமைச்சர், உயரதிகாரிகள் நேரில் ஆய்வின் போதும் கண்டறியப்பட்டது.சுகாதாரத்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர், நர்ஸ், இதர பணியாளர்களுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே அறை ஒதுக்கப்பட்டுள்ளது.புகார்கள் தொடர்ச்சியாக வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும், டாக்டர் அறை மற்றும் நுழைவு வாயில்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது.இதன் வாயிலாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க முடியும். இதற்காக ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உள்கட்டமைப்பு குறித்து விபர அறிக்கை பெறப்பட்டு வருகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ