உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய தடகளத்தில் எஸ்.வி.ஜி.வி., முதலிடம்

குறுமைய தடகளத்தில் எஸ்.வி.ஜி.வி., முதலிடம்

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், 66வது குடியரசு தின, குறுமைய விளையாட்டு போட்டி, காரமடை அடுத்த புஜங்கனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நேற்று நடந்தன. தலைமை ஆசிரியை ஜோதிமணி தலைமை வகித்தார். கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், போட்டியை துவக்கி வைத்தார். 19 வயது 800 மீட்டர் ஓட்டத்தில், காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி மாணவர் வினிஸ் முதலிடம், பெத்திக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ரூபேஸ் இரண்டாமிடம், காரமடை வித்ய விகாஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்ச்செல்வன் மூன்றாமிடம் பெற்றனர். 17 வயது 800 மீட்டர் ஓட்டத்தில், காரமடை எஸ்.வி.ஜி.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ்குமார் முதலிடம், நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சஞ்சய் இரண்டாமிடம், மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கிருத்திக்ராஜன் மூன்றாமிடம் பெற்றனர். 14 வயது 600 மீட்டர் ஓட்டத்தில், சிறுமுகை அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பிரனேஷ் முதலிடம், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம். விதான் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆதவ் தர்ஷன் இரண்டாமிடம், எஸ்.வி.ஜி.வி. மாணவர் அவினேஷ் மூன்றாமிடம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை