உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மன்னீஸ்வரர் கோயில் திருவிழா பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா

 மன்னீஸ்வரர் கோயில் திருவிழா பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவில், பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் 26ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலையில், தேவார இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா அன்னூரின் முக்கிய வீதிகளின் வழியாக நடந்தது. இதையடுத்து பவளக்கொடி கும்மி கலைக்குழுவின் கும்மி ஆட்டம் நடந்தது. விழாவில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் பங்கேற்றனர். இன்று காலை 10:30 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை காலை 11:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இரவு யானை வாகனத்தில், சுவாமி திருவீதி உலாவும், இதையடுத்து வள்ளி கும்மியாட்டமும் நடைபெறுகிறது. வருகிற 31ம் தேதி காலை 10:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை