மேலும் செய்திகள்
கீழச்சிவல்பட்டியில் கைப்பந்து போட்டி
15-Aug-2025
அன்னுார்; 450 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பங்கேற்கும் தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி அன்னுாரில் நேற்று துவங்கியது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, அந்தமான் ஆகிய பகுதிகளில் உள்ள 450 சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் இருந்து 4,500 மாணவ, மாணவியர் பங்கேற்கும் தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி நேற்று துவங்கியது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் தென் மண்டலதுணை அலுவலர் பரமசிவன் சி.பி.எஸ்.இ., கொடியை ஏற்றினார். சி.பி.எஸ்.இ., பார்வையாளர் முரளிதரன் பள்ளிக் கொடியை ஏற்றினார். பள்ளி நிர்வாக அறங்காவலர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பூங்கொடி வரவேற்றார். பள்ளி சேர்மன் ரகுராம் போட்டி விவரங்களை தெரிவித்தார். 10 வயது முதல் 19 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு, பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெறுகிறது. போட்டி வரும் 30ம் தேதி முடிகிறது. இதில் வெற்றி பெறுவோர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.
15-Aug-2025