உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக பட்டாள நலச்சங்க கோவை கிளை துவக்கம்

தமிழக பட்டாள நலச்சங்க கோவை கிளை துவக்கம்

கோவை: ஒருங்கிணைந்த தமிழக பட்டாள நலச்சங்க (அமைப்பு) கோவை மாவட்ட கிளை அலுவலக திறப்பு விழா, நேற்று நடந்தது. முன்னாள் லெப்டினென்ட் கர்னல், நாகராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் பாண்டியன் பேசுகையில், ''முன்னாள் படைவீரர்கள் நலனுக்காக அமைப்பு துவங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு முன் னாள் ராணுவ படை வீரர்களுக்கான அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும். பிற மாவட்டங்களிலும், இதேபோன்று கிளை அலுவலகங்கள் துவங்கப்பட உள்ளன,'' என்றார். முன்னதாக, மாவட்ட தலைவர் லோகநாதன் வரவேற்றார். மண்டல தலைவர் சுந்தர்ராஜன், மாநில மகளிரணி தலைவர் குழந்தை தெரசா ஆனந்தம், மாநில பொருளாளர் தில்லை நடராஜன், மாநில துணைத்தலைவர் பொன்பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ