தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம்
கோவை: நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்நாடு என, அரசு பஸ்களில் எழுதும் போராட்டம் நேற்று நடந்தது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நடந்த போராட்டத்தில், கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் கூறுகையில், ''தமிழகத்துக்கு தமிழ்நாடு என்ற பெயரை வைத்தவர்கள் நாங்கள் என, தி.மு.க., வினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த தி.மு.க., அவர்களது ஆட்சியில், போக்குவரத்துக் கழக பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயரையே பயன்படுத்தவில்லை. அரசு போக்குவரத்துக்கழகம் என்றே பயன்படுத்துகிறது. மாநில சுயாட்சி, தன்னாட்சி பேசும் தி.மு.க., வினர் தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்த பயப்படுவது ஏன்,'' என்றார். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' எனும் ஸ்டிக்கரை ஒட்டினர். கோவை: நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்நாடு என, அரசு பஸ்களில் எழுதும் போராட்டம் நேற்று நடந்தது. காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் நடந்த போராட்டத்தில், கோவை தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேரறிவாளன் கூறுகையில், ''தமிழகத்துக்கு தமிழ்நாடு என்ற பெயரை வைத்தவர்கள் நாங்கள் என, தி.மு.க., வினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த தி.மு.க., அவர்களது ஆட்சியில், போக்குவரத்துக் கழக பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயரையே பயன்படுத்தவில்லை. அரசு போக்குவரத்துக்கழகம் என்றே பயன்படுத்துகிறது. மாநில சுயாட்சி, தன்னாட்சி பேசும் தி.மு.க., வினர் தமிழ்நாடு என்ற வார்த்தையை பயன்படுத்த பயப்படுவது ஏன்,'' என்றார். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியினர் அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' எனும் ஸ்டிக்கரை ஒட்டினர்.