தமிழ் பு।த்தாண்டு பிறந்தது கோவில்களில் மக்கள் தரிசனம்
கோவை; தமிழ் புத்தாண்டான குரோதி ஆண்டு விடை பெற்று, விசுவாவசு நேற்று பிறந்ததையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. முந்திவிநாயகருக்கு முக்கனிகளான மா, பலா, வாழை தவிர, அன்னாசி, மாதுளை, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் உள்ளிட்ட இரண்டு டன் எடை கொண்ட பழங்களால், விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.மருதமலை, ஈச்சனாரி, கோனியம்மன் கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.பெரியகடை வீதி லட்சுமிநாராயண வேணுகோபாலசுவாமி, கோனியம்மன், பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், அவிநாசிசாலை தண்டுமாரியம்மன், சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நேற்று புத்தாண்டையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.