மேலும் செய்திகள்
கவிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு
29-May-2026
ரேஸ்கோர்ஸ்: வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், 360 வது இலக்கிய சந்திப்பு கூட்டம் மற்றும் நுால் வெளியீட்டு விழா, ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் அரங்கில் நடந்தது. கவிஞர் கணேசன் எழுதிய 'இலக்கியத் தமிழ் விருந்து' என்ற மரபுக்கவிதை நுாலை, கவிஞர் ராமலிங்கம் வெளியிட, குழந்தைவேலன் பெற்றுக்கொண்டார். கவிஞர்கள் புதியவன், பெருமாள் எழுத்தாளர் தினகரன், தமிழாசிரியர் குமாரசாமி மற்றும் புலவர் மாரப்பன் ஆகியோர் நுால் குறித்து கருத்துரை வழங்கினர். நுாலாசிரியர் கணேசன் பேசுகையில், ''தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டிய தமிழ் வளர்ச்சித்துறையில் உள்ளவர்களே திருக்குறளை பிழையாக எழுதுகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு தமிழை பிழையின்றி கற்பிக்க வேண்டும்,'' என்றார். கவிஞர்கள், சுந்தரராமன், தன்மானம், மைதிலி யோகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
29-May-2026