மேலும் செய்திகள்
தோட்டக்கலை பண்ணையில் துணை இயக்குனர் ஆய்வு
02-Oct-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு வட்டார தோட்டக்கலைத்துறையில், செயல்விளக்க திடல் திட்டத்தில், ஆயிரம் ெஹக்டேர் இலக்கு பெறப்பட்டுள்ளது, என, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார். பொள்ளாச்சி தெற்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா அறிக்கை: பொள்ளாச்சி தெற்கு வட்டார தோட்டக்கலைத் துறையில், தென்னை வளர்ச்சி வாரியம் செயல்விளக்கத்திடல் அமைத்தல் திட்டத்தில், 2025--26ம் ஆண்டின் கீழ், தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல், சீதோஷ்ண நிலை காரணமாக பாதிப்படைந்த மரங்களுக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு, 50 சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கப்படுகிறது. இதற்கு, பொள்ளாச்சி தெற்கு தோட்டக்கலை துறைக்கு, ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் வாயிலாக, ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனடைந்து இருந்தால், இத்திட்டத்தில் பயன்பெற இயலாது. மேலும், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக, தென்னை பயிரைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈ பூச்சி மேலாண்மைக்கான மஞ்சள் அட்டை மற்றும் ஒட்டுண்ணி வழங்கப்பட உள்ளது. அதற்கு, கிராம நிர்வாக அலுவலர் சான்று (கூட்டு பட்டாவாக இருந்தால்), அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல், புகைப்படம் இரண்டு வழங்க வேண்டும். அனைத்து ஆவணங்களும், ஒரு ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் எடுத்து வர வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
02-Oct-2025