உள்ளூர் செய்திகள்

மனசை அள்ளுது டேஸ்ட்

பாவளியை நினைக்கும்போது பட்டாசும், இனிப்பும்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. கேரட் அல்வா, கேரட் மைசூர் பா, கருப்பட்டி லட்டு, காஜு கட்லி, பிஸ்தா ரோல், புரூட் அல்வா, பேரிட்சை லட்டு, இளநீர் அல்வா, பாதாம் ரோல், முந்திரி கேக், பாதாம் கேக், பிஸ்தா லட்டு, முந்திரி லட்டு, சாக்லேட் பாதாம் லட்டு, ரோஸ் முந்திரி கட்லி, நெய் பாதுஷா என, நீண்டுக் கொண்டே செல்கின்றன இனிப்பு வகைகள். காந்திபுரம் ஸ்ரீமுருகவிலாஸ் ஒரிஜினல் நெல்லை பெரியலாலா கார்னர் ஸ்வீட்ஸ்' நிறுவனத்தில், இந்த ஸ்வீட் பட்டியலில் எதைக்கேட்டாலும், 'எத்தனை கிலோ சார்' என்று கேட்கின்றனர். பாரதியார் ரோட்டில் செயல்பட்டு வரும் அடையார் ஆனந்தபவனிலோ, சொல்லவே வேண்டாம். புது, புது ஸ்வீட் ஆக தயாரித்து காட்சிக்கு வைத்து ஈர்க்கின்றனர். இந்த தீபாவளிக்கு இனிப்புகளோடு சிறப்பாக கொண்டாட, டேஸ்ட்டி டிலைட்' என்ற பெயரில் ஜாமுன், சோன்பப்டி, மிக்சர், காராசேவு, சீடை என வைக்கப்பட்ட பாக்ஸ்கள், வெறும் இனிப்புகள் மட்டுமே இல்லாமல், வித்தியாசமான அனுபவத்தையும் வழங்குகின்றன. சாக்லேட் பைட், பாதாம், முந்திரி, ஆரஞ்சு பைட் ஆகியவை அப்படியொரு அலாதி சுவை. ஒரு தனி கிப்ட் பாக்கெட்டில், பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவை, தீபாவளி பரிசு வழங்க கச்சிதமாக தருகின்றனர். ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட் அண்ட் ஸ்நேக்ஸில் லக்சுரி லட்டு வகையில், பாதாம் ரோஸ் லட்டு, காஜு ரைஸ் லட்டு, காஜு லட்டு, பிஸ்தா லட்டு ஆகியவற்றின் சுவை சுண்டி இழுக்கிறது. நெய் மைசூர் பா, கேரட் மைசூர் பா, நெய் லட்டு, ப்ளூபெரி காஜு டிலைட், ஆரஞ்ச் ஐஸ்க்ரீம் பர்பி, ப்ரூட் அல்வா, பனாரஸ் சோன் பப்டி, முந்திரி கேக், ஹார்லிக் பர்பி, டேட்ஸ் லட்டு ஆகியவை அடங்கிய பேக், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்க நல்ல கிப்ட். இதை தவிர, ப்ரீமியம் காஜு கட்லி, காஜு ட்ரை ப்ரூட் ரோல், காஜு பிஸ்தா ரோல், முந்திரி அல்வா, காஜு பிஸ்கட், அமெரிக்கன் ட்ரை புரூட், லக்ஸரி லட்டு, கேஷ்யூ பிஸ்கட், ரிச் நட்ஸ், ட்ரை புரூட் மிக்சர் என, அத்தனையும் நமது சுவை நரம்புகளுக்கு சவால் விடுக்கின்றன. கேஷ்யூ பிஸ்கட் பாக்ஸ்: இந்த பாக்ஸுக்குள் கேஷ்யூ பிஸ்கட், வால்நட் பிஸ்கட், மேங்கோ பிஸ்கட், குல்கந்து பிஸ்கட் அடங்கியிருக்கின்றன. ட்ரை புரூட்ஸ் அண்ட் நட்ஸ்: முந்திரி, கேஷ்யூ, வால்நட் அடங்கிய வகைகள், பலரின் விருப்பத் தேர்வாக மாறியிருக்கின்றன. நெய் மைசூர் பா, பாதாம் பர்பி, ஐஸ்க்ரீம் பர்பி, துாத் பேடா, பாம்பே அல்வா, நாக்பூர் சோன்பப்டி, மினி பாதுஷா, கிளாசிக் மைசூர் பா, டேட்ஸ் அல்வா, கேசரி மைசூர் பா, பூந்தி லட்டு அடங்கிய கிப்ட் பாக்ஸ், 400 கிராம் மற்றும் 800 கிராமில் கிடைக்கிறது. அடையார் ஆனந்தபவனில் விருப்பத்துக்கு ஏற்ப, அரை கிலோ, ஒரு கிலோ என வாங்கிக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ