உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் சிறையில் அடைப்பு

குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் சிறையில் அடைப்பு

சூலுார் : சூலுார் அருகே உள்ள குடியிருப்பில் பள்ளி மாணவி உள்ளிட்ட பல குடும்பத்தினர் குடியிருக்கின்றனர். சேலம் மாவட்டம் சீரகப்பட்டியை சேர்ந்த ராஜேஷ் கண்ணா, 20, என்ற வாலிபர், அந்த குடியிருப்பில் நான்கு நாட்களுக்கு முன் வாடகைக்கு வந்துள்ளார். நேற்று காலை, குடியிருப்பில் உள்ள ஒரு பள்ளி மாணவி, குளிக்கச் சென்றுள்ளார். அருகில் உள்ள பாத்ரூமில் இருந்து மொபைல்போன் மூலம் யாரோ வீடியோ எடுப்பதை, பள்ளி மாணவி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மாணவி சத்தம்போட்டதும், குடியிருப்பில் இருந்த மக்கள் வந்து பார்த்தபோது, வாலிபர் பாத்ரூமில் இருந்து வெளியே ஓடினார். அவரை பிடித்து சூலுார் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மொபைல்போனை ஆய்வு செய்த போலீசார், பல இடங்களில் எடுத்த ஆபாச வீடியோகளை கண்டுபிடித்தனர். போக்சோ வழக்கில், அவ்வாலிபரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ