கோவை குற்றாலம் செல்ல தற்காலிக தடை
தொண்டாமுத்தூர்; கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில், நீர்வரத்து அதிகரித்தது. கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சிக்கு, சுற்றுலா பயணிகள் வருகைக்கு, வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர்.