உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் திடீர் ஒத்திவைப்பு

வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் திடீர் ஒத்திவைப்பு

அன்னுார்; அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற இருந்த வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அன்னுார் ஒன்றியத்தில், கணுவக்கரை, குன்னத்தூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம், நாரணாபுரம் ஆகிய நான்கு ஊராட்சிகளில் கழிவுநீர் வடிகால் அமைத்தல், சாலை மேம்பாடு செய்தல், சமுதாய நலக்கூடம் மேம்படுத்துதல் ஆகிய ஆறு பணிகள் செய்ய 39 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்கான டெண்டர் கோரப்பட்டது. நேற்றுமுன்தினம் மாலை 3:00 மணி வரை ஒப்பந்த புள்ளிகள் தரலாம். 23ம் தேதி மாலை 4:00 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர். நேற்று மாலை ஒப்பந்ததாரர்கள் ஒன்றிய அலுவலகம் வந்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், 'டெண்டர் திறப்பு ஒத்திவைக்கப்படுகிறது,' என அதிகாரிகள் திடீரென தெரிவித்தனர். முன்னாள் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், 'ஆளுங்கட்சி தரப்பில் குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் தரப்பட்டது. எனினும் ஒப்பந்ததாரர்களில் ஒரு தரப்பினர் குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றனர். இதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எனவே, அதிகாரிகள் டெண்டர் திறப்பை ஒத்தி வைத்துள்ளனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை