உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளுக்கு வினியோகிக்க பாடபுத்தகம் இருப்பு வைப்பு

பள்ளிகளுக்கு வினியோகிக்க பாடபுத்தகம் இருப்பு வைப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வினியோகிக்க பாட புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில், காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளன.இதை தொடர்ந்து, இரண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் பள்ளிகளுக்குவழங்குவதற்காக கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என, மொத்தம், 87க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.ஆறாம் வகுப்பு முதல், ஏழாம் வகுப்பு வரை, 7,800 பேருக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்களும், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மொத்தம், 18,800 பேருக்கு நோட்டுகளும் வந்துள்ளன. இவை இருப்பு மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்புக்கு முன், அரசின் உத்தரவு வந்ததும் வழங்கப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை