மேலும் செய்திகள்
ஒரு போக விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
22-Dec-2024
வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 20ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா குறித்த ஆலோசனைக்கூட்டம், விழாக்குழு செயலாளர் மயில்கணேஷ் தலைமையில் நடந்தது. விழா ஒருங்கிணைப்பாளர் பொன்கணேஷ் வரவேற்றார்.கடந்த ஆண்டு நடந்த விழாவில், வரவு, செலவு கணக்குகளை பொருளாளர் சிந்துசெல்வம் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.கூட்டத்தில்,வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு தைப்பூசத்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடுவது என்றும், பிப்., 7ம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில், வரும், 10ம் தேதி சுவாமி திருக்கல்யாணமும், 11ம் தேதி அன்னதானம் வழங்கும் விழாவும் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
22-Dec-2024