உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு வினையானது; ஒருவருக்கு கத்திக்குத்து

விளையாட்டு வினையானது; ஒருவருக்கு கத்திக்குத்து

போத்தனூர்; கோவை, சுந்தராபுரம் அடுத்த பிள்ளையார் புரம், கஸ்தூரி கார்டனை சேர்ந்தவர் தங்கமணி, 19. நேற்று முன்தினம் இவர், தனது வீட்டின் முன் நண்பர்களான ஆறுமுகம் மற்றும் அவரது சகோதரர்கள் மணிகுமார், சதீஷ்குமார் ஆகியோருடன் கேரம் விளையாடினார். அப்போது தங்கமணியின் சகோதரர் மாகாளி, அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். இதனால் ஆறுமுகம் உள்ளிட்ட மூவரும், மாகாளியை திட்டினர். தங்கமணி இதுகுறித்து மூவரிடமும் கேட்டார். ஆத்திரமடைந்த மணிகுமார், சதீஷ் குமார் ஆகியோர் தங்கமணியை தாக்கினர். ஆறுமுகம் சிறு கத்தியால் குத்தினார். தங்கமணி சத்தமிடவும், அருகேயிருந்தோர் ஓடி வந்தனர். இதனைக்கண்ட மூவரும், தங்கமணியை மிரட்டிவிட்டு தப்பினர். தங்கமணி புகாரில், சுந்தராபுரம் போலீசார் விசாரித்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் இருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை