உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜன.,23ம் தேதி துவங்குது பில்டுமேட் கண்காட்சி

ஜன.,23ம் தேதி துவங்குது பில்டுமேட் கண்காட்சி

கோவை : கட்டுமான துறை புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய 'பில்டுமேட்' கண்காட்சி, ஜன., 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி., வளாகத்தில் நடக்கிறது.இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆர்க்கிடெக்ட்ஸ் (ஐ.ஐ.ஏ.,), அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் (ஏ.சி.சி.இ.,) மற்றும் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா (பி.ஏ.ஐ.,) சார்பில், கட்டுமானத்துறை கண்காட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.கண்காட்சியில், சர்வதேச அளவில், முன்னணி நிறுவனங்கள் 400 அரங்குகளில்,நவீன தொழில் நுட்பங்கள், 3டி தொழில் நுட்பத்தில், 24 மணி நேரத்தில் வீடு தயாராகும் விதம், முன் தயாரிக்கப்பட்ட பொறியியல் இரும்பு கட்டுமானம், செயற்கை நுண்ணறிவுமுறையில் ரோபோக்களை பயன்படுத்தி வீடு கட்டுவது உள்ளிட்ட புது தொழில்நுட்பங்கள் இடம் பெறவுள்ளன.தற்போது வரை, 200 அரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரங்கு அமைக்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ