உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் முகாம் நடக்குது
வால்பாறை; வால்பாறையில் இன்றும் (19ம் தேதி), நாளையும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் முகாம் நடக்கிறது.வால்பாறை தாசில்தார் சிவக்குமார் அறிக்கை:தமிழக அரசின் சார்பில், 'உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்' வால்பாறையில் இன்று (19ம் தேதி) நடக்கிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.வால்பாறை வரும் மாவட்ட கலெக்டர், வார்டுகளில் நடைபெறும் திட்டப்பணிகளை காலை, 9:00 மணிக்கு கள ஆய்வு செய்கிறார். அதன்பின் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் வாயிலாக மாவட்ட கலெக்டரிடம் நேரில் வழங்கலாம்.நகராட்சி கூட்ட அரங்கில், மாலை, 6:00 மணிக்கு அனைத்து துறை உயர்அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாளை, 20ம் தேதி அரசு அலுவலகம், பள்ளிகள், அங்கன்வாடிகளில் ஆய்வு செய்கிறார்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.