உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சாதா விசைத்தறிகளை நவீனமயமாக்க வேண்டும் விசைத்தறி சங்க பொதுக்குழுவில் தலைவர் அறிவுறுத்தல்

 சாதா விசைத்தறிகளை நவீனமயமாக்க வேண்டும் விசைத்தறி சங்க பொதுக்குழுவில் தலைவர் அறிவுறுத்தல்

சோமனூர்: கோவை,திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சோமனூரில் நடந்தது. சங்க தலைவர் பூபதி தலைமை வகித்து பேசுகையில், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு இடையே விசைத்தறி தொழில் நடக்கிறது. சாதா விசைத்தறிகளை நவீனமாக்குவது காலத்தின் கட்டாயம். நம்முடைய கோரிக்கையை ஏற்று, விசைத்தறிகளை நவீனப்படுத்த, ரூ. 30 கோடி அரசு ஒதுக்கியுள்ளது. நடப்பாண்டில், 3 ஆயிரம் விசைத்தறிகளை நவீனப்படுத்தி கொள்ளலாம், என்றார். கூலி ஒப்பந்தம் அறிவிப்பாக இல்லாமல், சட்ட பாதுகாப்புடன் கூடிய அரசாணையாக வெளியிட வேண்டும். விசைத்தறிகளை நவீனப்படுத்த, சோலார் பேனல் அமைக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும். சங்கத்துக்காக வாழ்நாளை அர்ப்பணித்து, பல போராட்டங்களை நடத்தி அரசிடம் சலுகைகளை பெற்று தந்த முன்னாள் தலைவர் பழனிசாமிக்கு, தலைமை அலுவலகத்தில் மார்பளவு வெண்கல சிலை வைத்தல், தலைமை அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய நிதி திரட்டுதல் என்பன உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விசைத்தறிகளை நவீனப்படுத்தும் திட்டத்தில் எவ்வாறு சேருவது, மானியம் எவ்வளவு, என்ன பயன் என்பது குறித்து விளக்கப்பட்டது. விசைத்தறியாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் கிளை சங்க பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை