உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பீடம்பள்ளி அரசு பள்ளியில் பாடம் நடத்திய கலெக்டர்

பீடம்பள்ளி அரசு பள்ளியில் பாடம் நடத்திய கலெக்டர்

சூலுார்: பீடம் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர், மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். சூலுார் ஒன்றியம் பீடம் பள்ளியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்க வந்த கலெக்டர் பவன் குமார் அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி திறன் குறித்து கேட்டறிந்தார். மாணவர்களிடம் பாடங்களை படிக்க கூறி கேள்விகள் கேட்டார். கரும்பலகையில் கணக்குகளை எழுதி பாடம் நடத்தி, மாணவர்களை விடையளிக்க கூறினார். மதிய உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார். அவர் பேசுகையில், ''இந்த பள்ளி கடந்த பொதுத்தேர்வில், 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. நீங்கள் நன்றாக படித்து, 100 சதவீதம் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும். இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்து படித்து, உயர்ந்த பொறுப்புகளை அடைந்துள்ளனர். உங்களாலும் முடியும். எந்த சந்தேகமோ, உதவியோ தேவைப்பட்டால் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தயங்காமல் கூறுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ