உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார துறையில் நர்ஸ்கள் பங்களிப்பு முக்கியமானது

சுகாதார துறையில் நர்ஸ்கள் பங்களிப்பு முக்கியமானது

கோவை; பி.எஸ்.ஜி., நர்சிங் கல்லூரி, 25வது பட்டமளிப்பு விழா, பி.எஸ்.ஜி., மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி கலையரங்கில் நேற்று நடந்தது. நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.மத்திய சுகாதார துறை செவிலியர் ஆலோசகர் தீபிகா பட்டங்களை வழங்கி பேசுகையில், ''சுகாதார துறையில் நர்ஸ்களின் பங்களிப்பு முக்கியமானது. எதிர்வரும் காலங்களில் சுகாதார துறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், நோயாளியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பட்டதாரிகள் தங்கள் திறனையும், பங்களிப்பையும் அளிக்க வேண்டும்,'' என்றார்.கல்லுாரியின், 2020 பேட்ச் மாணவி, இவாஞ்சலின் சிறந்த பட்டதாரி விருதை பெற்றார். விழாவில், 96 இளங்கலை மற்றும் ஐந்து முதுகலை பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். கல்லுாரி முதல்வர் ஜெயதீபா வரவேற்றார். கல்லூரி இதழான 'ரிமென்ஸி 25 ஆரோரா' வெளியிடப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் மீரா சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ​முன்னதாக, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா நர்ஸிங் கல்லூரியின் துணை முதல்வர் காஞ்சனா பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை