உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நிரம்பியது தடுப்பணை

 நிரம்பியது தடுப்பணை

வால்பாறை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், வால்பாறை நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பியது. சோலையாறு அணையின், 160 அடி உயரத்தில், நேற்று காலை, 56.36 அடி நீர்மட்டம் இருந்தது. மூன்று நாட்களில் 17 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு, 687 கனஅடி நீர்வரத்து இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை