உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவுட்டுக்காய் வெடித்து நாய் தலை சிதறல்

அவுட்டுக்காய் வெடித்து நாய் தலை சிதறல்

தொண்டாமுத்துார்: ஆறுமுககவுண்டனுாரில் உள்ள காலியிடத்தில், அப்பகுதியினர் குப்பை கொட்டி வந்தனர். நேற்று மாலை, அக்குப்பையில் ஒரு தெருநாய் உணவு தேடிக்கொண்டிருந்தபோது, அவுட்டுக்காய் வெடித்ததில், தலை சிதறி உயிரிழந்தது. விலங்குகள் நல ஆர்வலர் பிரதீப், பேரூர் போலீசில் புகார் அளித்தார். அப்பகுதிக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். காட்டுப்பன்றிகளை வேட்டையாட, பேரூர் எம்.ஆர். கார்டன் பகுதியை சேர்ந்த செல்வராஜ்,51 என்பவர் அ வு ட்டுக்காய் வைத்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, எங்கிருந்து அவுட்டுக்காய் கிடைத்தது என்பது குறித்து விசாரிக் கின் றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி