உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைவாழ் மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது

மலைவாழ் மக்களுக்கு தண்ணீர் கிடைத்தது

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொக்கனூரில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு அருகே தன்னார்வலர் சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.கிணத்துக்கடவு சொக்கனூர் ஊராட்சியில், மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், 30க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி குறைவாகவே இருந்தது.இதை தொடர்ந்து, சொக்கனூரை சேர்ந்த கிணத்துக்கடவு பா.ஜ., ஒன்றிய பொது செயலாளர் கோபால் என்ற தன்னார்வலர் தாமாக முன்வந்து, கிணற்றில் இருந்து குழாய் அமைத்து நீர் தொட்டி வாயிலாக தண்ணீர் வழங்கியுள்ளார்.இந்த தண்ணீர் தொட்டியை சொக்கனூர் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் திருநாவுக்கரசு மற்றும் மோகன்குமார் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ