மேலும் செய்திகள்
கேல் ரத்னா விருதுகள் அறிவிப்பு!
03-Jan-2025
சூலுார்; முத்துகவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் மாதந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு, விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது.இயக்க தலைவர் சம்பத்குமார், நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.'புகழ் ஓங்கிய பாரதம்; அறிவியலின் தாயகம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு சொற்பொழிவாளர் சபாபதி பேசியதாவது:பாரத தேசம் ஆன்மிகத்தை தாண்டி, வேதங்கள், யோகம், கணிதம், அறிவியல் ஆயுர்வேதம், வானியல் உள்ளிட்ட துறைகளில் மேலோங்கி உலகுக்கே வழிகாட்டியாக இருந்தது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளும், அவர்களின் அறிவுக்கும் நிகரானவர்கள் உலகத்தில் எங்கும் இல்லை. இந்திய கிராமங்களின் வருவாய் மூலம் நிர்வகிக்கப்பட்ட நாளந்தா பல்கலையில், வெளிநாட்டு மாணவர்கள், அறிஞர்கள் வந்து படித்து சென்றனர். தட்சசீலா பல்கலையில் அரசியல், ஆயுர்வேதம் போர் கலைகள் பயிற்றுவிக்கப்பட்டது. கணிதத்தில் உள்ள பூஜ்யத்தை கண்டு பிடித்தது மட்டுமல்ல, அல்ஜீப்ரா , பிதாகரஸ் தேற்றம் , எண் கணிதம், முக்கோணவியல், வேத கணிதத்தில் நாம் தான் முன்னோடி. நம் முன்னோர்களின் அறிவு, ஆற்றல், அறம் சார்ந்த வாழ்க்கை குறித்து நாம் முதலில் அறிந்து கொண்டு, நம் சந்ததியினருக்கு கூறவேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
03-Jan-2025