மேலும் செய்திகள்
பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூ
11-Nov-2025
உடுமலை: உடுமலை நகரில், நவ., மாதத்தில் மலர்ந்துள்ள பிரம்ம கமலம் பூக்களை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர். புனித மலராக கருதப்படும் பிரம்ம கமலத்தை, தற்போது மக்கள் ஆர்வத்துடன் வீடுகளில் வளர்க்கின்றனர். இரவில் மலர்ந்து நறுமணம் வீசும் இந்த மலர்கள் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கிறது. வழக்கமாக, ஜூலை - ஆக., மாதங்களில், இம்மலர்கள் பூக்கும். உடுமலை யு.கே.சி., நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வேலுச்சாமி வீட்டில், நேற்று முன்தினம் இரவு பிரம்ம கமலம் பூத்தது. நவ., மாதத்தில் பூத்துள்ள இப்பூக்களை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்செல்கின்றனர்.
11-Nov-2025