மார்கழி மாத உற்சவம் நிறைவு
பெ.நா.பாளையம் : சின்னதடாகம்புதூரில் உள்ள ஸ்ரீ சக்தி சித்த செல்வ விநாயகர் கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி தினசரி பஜனை, ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் சக்தி சித்த செல்வ விநாயகர் கோவில் வளாகத்தை வந்து அடைந்தது. ஆண்டாள் பாசுரம் பாடிய பின்பு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.நிறைவு நாளை ஒட்டி ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை ஒட்டி பஜனை, பொங்கல் வைத்தல், சிலம்பம் சுற்றுதல், ஜமாப் நிகழ்ச்சிகள் நடந்தன.