உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெட் ஒர்க் பிரச்னை: ஆன்லைன் பரிவர்த்தனை பாதிப்பு

நெட் ஒர்க் பிரச்னை: ஆன்லைன் பரிவர்த்தனை பாதிப்பு

வால்பாறை : வால்பாறையில், 'நெட் ஒர்க்' பிரச்னையால் ரேஷன் கடைகளில் 'ஆன்லைன்' வாயிலாக பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.மத்திய அரசு, டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை 'ஆன்லைன்' வாயிலாக பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மொபைல்போன் வாயிலாக பணம் செலுத்தும் வசதியை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள ரேஷன் கடைகளில், பொதுமக்கள் எளிய முறையில் பணம் செலுத்த வசதியாக கடந்த ஆண்டு அக்., மாதம் 'பேடிஎம்' சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.இதனால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் மக்கள், மொபைல்போன் வாயிலாக பணத்தை எளிதில் செலுத்தினர். ஆனால் பெரும்பாலான கடைகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை.வால்பாறை சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி கிளை மேலாளர் அண்ணாதுரையிடம் கேட்ட போது, சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடிக்கு சொந்தமான, 16 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் மக்கள், 'ஆன்லைன்' வாயிலாக பணத்தை செலுத்தும் வகையில் 'பேடிஎம்' சேவை வழங்கப்பட்டது.ஆனால், எஸ்டேட் பகுதி களில் உள்ள கடைகளில் பி.எஸ்.என்.எல்., நெட் ஒர்க் பிரச்னையால், இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை