மேலும் செய்திகள்
வைகுண்ட ஏகாதசி விழா இன்று சொர்க்கவாசல் திறப்பு
30-Dec-2025
கோவை ஆங்கில புத்தாண்டு, சுக்லபட்ச துவாதசி திதி, கார்த்திகை நட்சத்திரம் நான்காம் பாதம், கன்னி லக்னம், ரிஷப ராசியில் சூரியனின் ஆதிக்கத்தில் இன்று பிறக்கிறது. இந்த ஆண்டு சுபிட்சத்தையும் அமைதியையும் தரும் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். பெரியகடைவீதியிலுள்ள புனித மைக்கேல் அதிதுாதர் பேராலயத்திலும், உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ.இம்மானுவேல் சர்ச்சிலும், அரசு மருத்துவமனை எதிரிலுள்ள கிறிஸ்துநாதர் தேவாலயத்திலும், நஞ்சப்பா சாலையிலுள்ள கிறிஸ்துஅரசர் தேவாலயத்திலும் நேற்று நள்ளிரவு, சிறப்பு திருப்பலி ஆராதனைகள் நடந்தன. இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில், அதிகாலை மஹாகணபதி ஹோமமும், சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. காய்கறி பழங்களால் அலங்காரம் செய்கின்றனர். ஈச்சனாரி விநாயகர் தங்ககவசம் சுவர்ண அலங்காரத்தில், மலர் மாலைகளுடன் காட்சியளிக்கிறார். மஹா கணபதி ஹோமமும் சிறப்பு வழிபாடுகளும், இரவு தங்கத்தேர் வைபவமும் நடக்கிறது. சாய்பாபா கோயில் நாகசாயி மந்திரில், காலை 4:30க்கு காகட ஹாரத்தி, 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:30 மணிக்கு பாலாபிஷேகமும், மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது. மதியம் 11 மணிக்கு பூஜித்த 10 ரூபாய் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு தங்கத்தேர் இழுக்கப்படுகிறது. மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில், அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சுவாமி காட்சியளிக்கிறார். மாலை தங்கத்தேர் வைபவம். பெ ரியகடை வீதி கோனியம்மன், அவிநாசி சாலை தண்டுமாரியம்மன், கோட்டை சங்கமேஸ்வரர், உக்கடம் லட்சுமிநரசிம்மர் மற்றும் கரிவரதராஜ பெருமாள், பெரியகடைவீதி லட்சுமிநாராயணர், சலிவன்வீதி வேணுகோபாலகிருஷ்ணர், பாப்பநாயக்கன்பாளையம் சீ னிவாசபெருமா ள், ஜெகன்நாதப் பெருமாள் கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
30-Dec-2025