சி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் செஞ்சுரி அடித்து விளாசிய வீரர்
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில், பி.எஸ்.ஐ., ஐ.எம்.எஸ்., உள்ளிட்ட மைதானங்களில், டிவிஷன் போட்டிகள் நடந்துவருகின்றன. ஒன்றாவது டிவிஷன் போட்டியில், கோவை நைட்ஸ் அணியும், ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.முதலில் பேட்டிங் செய்த கோவை நைட்ஸ் அணி, 38.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 171 ரன்கள் எடுத்தது.வீரர்கள் ராதாகிருஷ்ணன், 69 ரன்களும், கார்த்திக் சங்கர், 34 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர்கள் ராஜகுகன், நிர்மல் குமார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.அடுத்து விளையாடிய ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர், 39 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 175 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் கவுசிக், 74 ரன்களும், நிர்மல் குமார், 37 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் செல்வக்குமரன் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.இரண்டாவது டிவிஷன் போட்டியில், ஜாலி ரோவர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின. பேட்டிங் செய்த ஜாலி ரோவர்ஸ் அணியினர், 50 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு, 205 ரன்கள் எடுத்தனர். அணி வீரர் பிரியதர்ஷன் அதிகபட்சமாக, 102 ரன்கள் விளாசினார்.அடுத்து விளையாடிய திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியினர், 49.3 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு, 206 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் நிதர்சன், 64 ரன்களும், சத்தியன், 35 ரன்களும், ராஜாராம் தாண்டவராஜ், 38 ரன்களும் எடுத்தனர்.