உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுதந்திர இந்தியாவின் வேர்கள்; கோவை தொழிலாளி உருக்கம்

சுதந்திர இந்தியாவின் வேர்கள்; கோவை தொழிலாளி உருக்கம்

கோவை; கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி ராஜா, 79வது சுதந்திர தினத்தையொட் டி, ஆலமரத்தின் ஆணிவேர் எனப்படும் 5 கிளைகளில், 3 கிளைகளில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், காமராஜர், பகத்சிங், சுப்பிரமணிய பாரதியார் உள்ளிட்ட 20 தேசத் தலைவர்களின் உருவப்படங்களை, பெயின்டால் வரைந்துள்ளார். ராஜா கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளாக, ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் வித்யாசமான முறையில் தேசத் தலைவர்களின் படங்களை வரைந்து வருகிறேன். இந்த ஆண்டு, புதிய முயற்சியாக ஆலமரத்தின் ஆணிவேர்களில் வரைந்துள்ளேன். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள், நமது சுதந்திரத்தின் ஆணிவேர்கள் என்பதை உணர்த்தும் வகையில், இந்த 20 தலைவர்களின் உருவப்படங்களை வரைந்தேன்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ