உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிழல் படம் போல் கதை இருக்கணும்

நிழல் படம் போல் கதை இருக்கணும்

கோவை; புலம் தமிழ் இலக்கியப் பலகை அமைப்பின் 10வது இலக்கியச் சந்திப்பு கூட்டம், சூலுார் வள்ளலார் அரங்கில் நடந்தது. தமிழரசன் தலைமை வகித்தார். கவிஞர் தேவி நாச்சியார் எழுதிய, 'சித்திரச் சோலைகள்' கவிதை நுாலை, புலம் அமைப்பாளர் ரவீந்திரன் வெளியிட, புலவர் அப்பாவு, தனபால் பெற்றுக்கொண்டனர். சக்தி சூர்யா எழுதிய 'நரவேட்டை' நாவல், இஸ்க்ரா எழுதிய 'தமிழ் நிலத்தில் அகஸ்தியர்' ஆகிய நுால்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நுால்கள் குறித்து பேராசிரியர்கள் புவனேஸ்வரி, அக்னி ஆகியோர் கருத்துரை வழங்கினர். கவிஞர் ரவீந்திரன் பேசுகையில், ''இலக்கியப் படைப்புகள் என்பது மண்ணையும், மக்களின் வாழ்வையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். காலத்தின் சூழலையும், மனிதர்களின் இன்ப, துன்பங்களையும் சித்தரிக்கும் விதமாக இயல்பான கதாபாத்திரங்களை கதைக்குள் உருவாக்க வேண்டும். நிகழ்காலத்தின் நிழல் படம்போல், கதைகள் இருக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை