உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இடியும் நிலையில் நிழற்கூரை; தொழிலாளர்கள் அதிருப்தி

இடியும் நிலையில் நிழற்கூரை; தொழிலாளர்கள் அதிருப்தி

வால்பாறை, ; வால்பாறை அருகே இடியும் நிலையில் உள்ள பயணியர் நிழற்கூரையை, மக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.வால்பாறை அடுத்துள்ளது மாணிக்கா எஸ்டேட். இங்குள்ள மாதா கோவில் சந்திப்பில் நகராட்சி சார்பில், பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது. இந்த நிழற்கூரை பாழடைந்து வருகிறது. பக்கவாட்டிலும், மேற்கூரையும் சேதமடைந்துள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்கூரையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை.மேலும், நிழற்கூரை பள்ளத்தில் இருப்பதால், குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் பயணியர் ஒதுங்கி நிற்பதற்கும் கூட அருகில் இடமில்லை.மக்கள் கூறியதாவது:வால்பாறை நகராட்சி சார்பில், எஸ்டேட் பகுதியில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படுவதில்லை. குறிப்பாக, யானைகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், இரவு நேரங்களில் தெருவிளக்கு கூட சில இடங்களில் எரிவதில்லை.மக்கள் பயன்பாட்டிற்காக, கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரையை இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் திறந்தவெளி 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர். நகராட்சி சார்பில் மாதா கோவில் சந்திப்பில் புதிய நிழற்கூரை கட்ட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ