மேலும் செய்திகள்
கோயில்களில் அறங்காவலர் குழு தலைவர்கள் தேர்வு
21-Jun-2025
சூலுார்: குலதெய்வ கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமித்ததை ரத்து செய்ய வேண்டும், என, தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத்தின் சூலுார் ஒன்றிய செயற்குழு கூட்டம் சூலுாரில் நடந்தது. மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய இணை செயலாளர் லீலா கிருஷ்ணன், நாகராஜ், கிருஷ்ணமாச்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சூலுார் ஒன்றியத்தில் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. விவசாய நிலத்தில் எண்ணெய் குழாய் பதிப்பதை கைவிட்டு, சாலை ஓரமாக பதிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரபு கல்லுாரிகளையும் ஆய்வு செய்து, இளைஞர்களை மூளை சலவை செய்து, பயங்கரவாத செயலுக்கு ஊக்குவிக்கும் கல்லுாரிகளை அடையாளம் கண்டு, அவற்றை தடை செய்ய வேண்டும்.குல தெய்வ கோவில்களை அரசு எடுத்துக்கொண்டு, அறங்காவலர்கள் நியமித்து வருவதை ரத்து செய்ய வேண்டும். கோவில் நிர்வாகிகளிடமே, நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
21-Jun-2025