உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொறுப்பு துணைவேந்தர், பதிவாளர் தமிழ் பல்கலையில் அடிக்கும் கூத்து

பொறுப்பு துணைவேந்தர், பதிவாளர் தமிழ் பல்கலையில் அடிக்கும் கூத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர்: தஞ்சாவூர், தமிழ் பல்கலையில், 2017 - -18ம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் என, 40 பேர், உரிய கல்வித்தகுதி இல்லாமல் முறைகேடாக, அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரனால் பணி நியமனம் செய்ததாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பான பொதுநல வழக்கு விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், 2021ம் ஆண்டு துணை வேந்தராக நியமிக்கப்பட்ட திருவள்ளுவன், 40 பேர் நியமனத்தில், தகுதி கான் பருவம் அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றது தொடர்பாக, கவர்னர் கேட்ட விளக்கத்திற்கு முறையான பதில் அளிக்காததால், திருவள்ளுவன் அக்., 20ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.இதையடுத்து, பல்கலை பொறுப்பு துணைவேந்தராக தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கர் நியமிக்கப்பட்டார். இவர் பேராசிரியர், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழலை உருவாக்கி வருவதால், பல்கலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சங்கருக்கு பதிலாக, பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதியை, துணை வேந்தர் பணிகளை கவனிக்கவும், ஆட்சிக்குழுவில் துணை வேந்தர் குழு நியமிக்கப்படும் வரை செயல்படுவார் எனக்கூறி, பொறுப்பு பதிவாளரான தியாகராஜன் ஆணை ஒன்றை பிறப்பித்தார்.இதே போல, ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க இருப்பதால், தற்போது பொறுப்பு பதிவாளராக பணியாற்றும் தியாகராஜன், விசாரணை வரம்பிற்குட்பட்டு இருப்பதாலும், நிர்வாக காரணங்களுக்காகவும் தியாகராஜனை பொறுப்பில் இருந்து நீக்கவும், அயல்நாட்டு தமிழ்க்கல்வி துறை இணைப்பேராசிரியர் வெற்றிச்செல்வனை, மறு ஆணை பிறப்பிக்கும் வரை அல்லது நிரந்தர பதிவாளர் பணி நியமனம் செய்யும் வரை பொறுப்பு பதிவாளராக நியமித்து ஆணையிடுவதாக, சங்கரும் ஒரு ஆணையை வெளியிட்டார். இவ்வாறாக பொறுப்பு துணை வேந்தர், பொறுப்பு பதிவாளர் மாற்றி, மாற்றி ஆணை பிறப்பித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலை பணியாளர்கள் கூறியதாவது:

டிச., 24ம் தேதி, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில், ஆட்சிக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான கோப்பை நகர்த்துமாறு, தமிழ் வளர்ச்சித்துறை செயலர், பல்கலை பதிவாளரான தியாகராஜனிடம் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், துணைவேந்தர் பொறுப்பில் உள்ள சங்கர், அரசு செயலருடன் ஆலோசனை பெறாமல், பதிவாளர் பொறுப்பில் உள்ள தியாகராஜனை நீக்கினார். இச்சம்பவம் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் கவனத்திற்கு சென்ற நிலையில், பல்கலையில் பழைய நிலையே தொடரவும், இரண்டு ஆணைகளையும் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

kulandai kannan
டிச 29, 2024 19:54

இவர்களால் இதுவரை x, f, z போன்ற எழுத்துகளுக்கு தமிழாக்கம் செய்ய, Ka, ga, ta, da வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க வக்கில்லை. இதிலே சண்டை வேறு.


என்றும் இந்தியன்
டிச 29, 2024 17:53

திராவிடம் என்பதை இந்த அரசின் செயலால் இப்படி ஆகிப்போனது தி-ருட்டு ரா-ப்பகலாக வி- விளம்பரம் ஒன்றே குறிக்கோளாக டம்-டம டம என்று டம்பமாக டமாரம் அடிக்கும் கூட்டம்


Rpalni
டிச 29, 2024 14:35

த்ரவிஷ கும்பலுக்கு ஊழல் செய்து கொள்ளை அடித்து வாரிசுகளை உருவாக்க மட்டுமே தெரியும். நிர்வாக அறிவு துளிகூட தெரியாது. நிதி நிர்வாகம் நோ வே


Mani . V
டிச 29, 2024 11:31

இவன்களை உடனடியாக நிரந்தரப் பணி நீக்கம் செய்யணும்.


Barakat Ali
டிச 29, 2024 11:24

பல்கலையில் கில்மா... பல்கலையில் பாஸ்போட துட்டு.. பல்கலையில் முறைகேடுகள்... வாளுக டுமீலுநாடு .....


Kanns
டிச 29, 2024 10:46

SHAME


Natarajan P
டிச 29, 2024 10:24

தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் நியமனம் பதவி உயர்வு அடிப்படையில் செய்யப்பட வேண்டும். தமிழக அரசு அதற்கான சட்டத்தை அவசரகால அடிப்படையில் திருத்த வேண்டும். மேலும், மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி அந்த மசோதாவில் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் துணைவேந்தர், பதிவாளர் நியமனத்துக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.


Perumal Pillai
டிச 29, 2024 09:57

எலி வேட்டைக்கு போகிறவர்கள் போல இருக்கானுவ .


நிக்கோல்தாம்சன்
டிச 29, 2024 09:11

திராவிட மாடல்


Indhuindian
டிச 29, 2024 08:41

சபாஷ் சரியான போட்டி


சமீபத்திய செய்தி