உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் கிடந்த பணத்தை ஒப்படைத்த இளைஞர்

ரோட்டில் கிடந்த பணத்தை ஒப்படைத்த இளைஞர்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ரோட்டில் கிடந்த பணத்தை மீட்டு ஒப்படைத்தஇளைஞருக்கு மேற்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசு கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்,25. இவர், தனியார் ஸ்பேர்பார்ட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.நேற்று காலை இருசக்கர வாகனத்தில் வழக்கம் போல வேலைக்கு வந்தார்.ஜமீன் முத்துார் தனியார் பள்ளி அருகே வந்த போது, ரோட்டில் கீழே பார்சல் கிடந்ததை எடுத்து பார்த்தார்.அதில், 2.5 லட்சம் ரூபாய் பணம் இருப்பதை கண்ட அவர், அருகே யாராவது உள்ளனரா என பார்த்தார். அதன்பின், பணத்தை பாதுகாப்பாக கொண்டு சென்று, மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்து, விசாரித்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.இதையடுத்து, அந்த இளைஞரை பாராட்டிய போலீசார், அது யாருடைய பணம் என விசாரித்து வருகினறனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை