மேலும் செய்திகள்
தரமற்ற உயிர் உரங்கள்; ஏமாறும் விவசாயிகள்
03-Apr-2025
பொள்ளாச்சி: 'கோவை மாவட்டத்தில், விவசாய தேவைக்காக, 13 ஆயிரம் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், விவசாயிகள் தற்போது கோடை உழவு செய்து நிலங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கூட்டுறவு சங்கங்களில் மானிய விலையிலும், தனியார் உரக்கடைகளிலும் உரங்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், முறையாக உரம் கிடைப்பதில்லை என்றும், டி.ஏ.பி., உரம் கேட்டால், கூடுதலாக வேறு உரம் வாங்க கடைக்காரர்கள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.உரங்கள் முறையாக கிடைக்கவும், இதுபோன்று பிரச்னைகளை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்டத்தில், யூரியா - 2,739 டன், டி.ஏ.பி., - 1,176 டன், பொட்டாஷ் - 2,943 டன், காம்பளக்ஸ் உரம் - 5,158 டன், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் - 1,113 டன் என மொத்தம், 13,130 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.அடுத்த மாதம் மேலும், 5 முதல் - 10 ஆயிரம் டன் பெறப்பட்டு இருப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு போதுமான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதனால், பற்றாக்குறைக்கு வாய்ப்பு இல்லை.நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் பெறக்கூடாது; உரங்கள் மானிய விலையில் வாங்கும் போது எவ்விதமான இணைப்பொருட்கள் வாங்க வற்புறுத்த கூடாது என கடைக்காரர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, கூறினர்.
03-Apr-2025