மாசு என்றாலே காற்று மாசு, நீர் மாசு, மண் மாசு எனத்தான் நினைவுக்கு வரும். ஆனால், நாம் அறியாமலே நம்மை சுற்றி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் மற்றொரு மாசுதான் ‛சத்தம்'. அதன் தாக்கம் குறித்து பெரிதாக யாரும் கவனம் செலுத்துவதில்லை. சில நிமிடம் சத்தமாக கடந்து போகும் விஷயம், தொடர்ந்து அதிகரிக்கும் போது, பலரின் இயல்பு வாழ்க்கை தொந்தரவாகிறது. கோவையில் காலை முதல் இரவு வரை பல சத்தங்கள் தொநர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சாலைகளில் வாகனங்களின் ஹாரன், அதிக சத்தம் எழுப்பும் வாகனங்கள், கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள், திருமணம் மற்றும் விழாக்களில் ஒலிக்கும் ஸ்பீக்கர்கள், ஏன் சில்லரை வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் ஸ்பீக்கர்கள் என, நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இரைச்சல் மாறிவிட்டது. கோவையின் முக்கிய பகுதியான காந்திபுரம், கணபதி, துடியலுார், வடமதுரை ஆகிய பகுதிகளில், ‛நாய்ஸ் பொல்யூஷன்' அதிகமாக உள்ளது என சமீப ஆய்வு கூறுகிறது. குறிப்பாக போக்குவரத்து அதிகம் உள்ள முக்கிய சாலைகள், வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்படும் தொடர் சத்தம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ‛அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பிசிக்ஸ்' வெளியிட்ட ஆய்வில், கோவையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சத்தத்தின் அளவு அதிகமாக பதிவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில் ‛60 முதல் 86 டெசிபல்' வரை சத்தம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. சத்தம் என்பது வெறும் தொந்தரவு மட்டும் இல்லை, உடல்நலத்தையும் பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அதிக சத்தம் சுற்றுச்சூழல் பாதிப்பு, துாக்கக் குறைவு, மனஅழுத்தம், கவனச்சிதறல், காதுகேளாமை, காதில் தொடர்ந்து சத்தம் கேட்டபது உள்ளிட்ட பாதிப்புகளுடன் தொடர்புடையதாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரின் கவலை தோய்ந்த பேச்சு, இதை உறுதிப்படுத்துகிறது. ‛ரோட்டில் நீண்ட நேரம் நிற்பதால் காற்று மாசு, துாசி, வாகன சத்தம் போன்ற மாசுக்களால் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு முறை ரோட்டில் நின்று கொண்டிருந்த போது, எனக்கு பின்னால் வந்த லாரி திடீரென அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்ததில், ஒரு நிமிஷம் இதயமே நின்றது போல உணர்ந்தேன். இது போல தினமும் பல சத்தங்களை எதிர்கொள்வது சிரமமாக உள்ளது. தொடர்ந்து சத்தம் கேட்பதால் துாக்கப் பிரச்னை, கவன சிதறல், எரிச்சல் ஏற்படுகிறது. வீட்டுக்கு வந்தாலும் காதில் தொடர்ந்து சத்தம் கேட்பது போன்ற நினைப்பு உள்ளது' என்கிறார் அவர். சத்தத்தை முழுமையாக தவிர்க்க முடியாது, ஆனால் தேவையற்ற சத்தத்தை குறைக்கலாம். காற்று, நீர், மண், மாசு குறித்து பேசும் அளவுக்கு, நம்மை சுற்றி அதிகமாக கேட்டுக்கொண்டிருக்கும் சத்தம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 'அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பிசிக்ஸ்' வெளியிட்ட ஆய்வில், கோவையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட சத்தத்தின் அளவு அதிகமாக பதிவாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நேரங்களில் ‛60 முதல் 86 டெசிபல்' வரை சத்தம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
எவ்வளவு இருக்கலாம் சத்தத்தின் அளவு?
பகுதிகள் பகல் இரவுகுடியிருப்பு பகுதி 55 டெசிபல் 45 டெசிபல்வணிகப் பகுதி 65 டெசிபல் 55 டெசிபல்தொழிற்சாலை பகுதி 75 டெசிபல் 70 டெசிபல்அமைதிப் பகுதி 50 டெசிபல் 40 டெசிபல்தகவல்: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் Gallery
'கேட்கும் திறன் குறைவதை உணராமல் இருக்கிறோம்'
கோவையை சேர்ந்த ஆடியாலஜிஸ்ட் சனுாப் பிரசாத் கூறியதாவது:‛எங்களிடம் வரும் பெரும்பாலானோருக்கு, வயது காரணமாக ஏற்படும் ‛பிரஸ்பைகுசிஸ்' எனப்படும் காது கேட்கும் திறன் குறைபாடு உள்ளது. ஆனால், சத்தத்தால் ஏற்படும் ‛நாய்ஸ் இன்டியூஸ்டு ஹியரிங் லாஸ்' பெரும்பாலும் தொழிற்சாலை பணியாளர்கள், மெஷின் ஆபரேட்டர்கள், அதிக சத்தம் உள்ள பணிகளில் ஈடுபடுபவர்களிடம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.இது திடீரென ஏற்படும் பிரச்னை அல்ல. பல ஆண்டுகளாக அதிக சத்தத்தை தொடர்ந்து கேட்கும் போது, காதுக்குள் இருக்கும் ‛ஹேர் செல்கள்' பாதிக்கப்படுவதால் படிப்படியாக கேட்கும் திறன் குறையலாம். ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஒரு ப்ரீக்வென்சி மட்டும் பாதிக்கப்படுவதால், பலரும் அதை உணராமல் இருக்கிறோம்.அதேபோல் அதிக சத்தத்தில் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்துவதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். 60 சதவீதத்துக்குள் சத்தத்தை வைத்து பயன்படுத்துவது நல்லது. தொடர்ந்து 2, 3 மணி நேரம் பயன்படுத்தாமல், இடையில் சற்று இடைவெளி கொடுக்க வேண்டும். விழாக்களில் அதிக சத்தம், பட்டாசு சத்தம், தொழிற்சாலை இயந்திரங்களின் சத்தம் போன்றவற்றிலும் கவனம் தேவை,” என்றார்.