உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வீஸ் ரோடு அகலப்படுத்தும் பணி துவங்க தயங்குவதேன்!

சர்வீஸ் ரோடு அகலப்படுத்தும் பணி துவங்க தயங்குவதேன்!

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் (கோவை வழி) அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில் குறிச்சி --- குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்கிறது. இதில், அவ்வப்போது தண்ணீர் கசிவு ஏற்பட்டு சர்வீஸ் ரோட்டில் முழுக்க வழிந்து ஓடுவதால், அடிக்கடி குழாய் சீரமைப்பு பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குறுகலான சேதமடைந்த ரோட்டில் குடிநீர் வீணாவது, கழிவுநீர் செல்வது, வாகன ஓட்டுநர்கள் 'ஒன்வே' திசையில் பயணிப்பது என பல சிக்கல் நிலவுகிறது. ஆனால், இன்று வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அகலப்படுத்தி சீரமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை. பொள்ளாச்சி வழி சர்வீஸ் ரோட்டில் தாலுகா, ஒன்றிய அலுவலகங்கள் இருப்பதால் இந்த ரோட்டிலும் மக்கள் 'ஒன்வே' திசையில் செல்லும் நிலை உள்ளது. இந்த சர்வீஸ் ரோட்டோரம் உள்ள மண் பாதையை ஒன்றிய அதிகாரிகள் சார்பில் மீண்டும் சீரமைப்பு செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை