சட்டப் போராட்டம் நடத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள்
சட்ட போராட்டம் உச்ச நீதிமன்றம் அனுமதியை வரவேற்கிறேன். பக்தர்களின் நீண்ட கால கோரிக்கை வெற்றி பெற்றது. பூர்ண சந்திரன் உயிர் தியாகம் வெற்றிக்கு ஒரு காரணம். ஹிந்துக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான ஏற்பாட்டை தமிழக அரசும்,அறநிலையத்துறையும் செய்ய வேண்டும். வரும் 22ல் இ.ம.க.,நடத்த இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாற்றி அமைத்து, கந்தசஷ்டி கவச பாராயணம், வேல் வழிபாடு, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். திருப்பரங்குன்றம் வருவோம், தீப தரிசனம் செய்வோம், புண்ணியம் பெறுவோம்.கோர்ட் தீர்ப்பை பெற சட்டப் போராட்டம் நடத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள். – அர்ஜுன்சம்பத், இந்து மக்கள் கட்சி தலைவர்.