உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் ஆரவாரம்

ஜெமினி கிராண்ட் சர்க்கஸ்

குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை விடப் போறாங்க. குழந்தைகள் புத்துணர்ச்சிக்கு எங்க கூட்டிட்டு போகலாம்னு நீங்க பிளான் பண்ணா, சரியான இடம், குதுாகலிக்க இன்று துவங்குது ஜெமினி கிராண்ட் சர்க்கஸ். கலைஞர்கள் எப்படியெல்லாம் நம்ம சிரிக்க வைக்குறாங்கன்னு பாக்கும் போது, குழந்தைகளுக்கு மட்டும் இல்ல. எல்லோருக்கும் வரும் ஒரு மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.நேரம்: மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.இடம்: திருச்சி ரோடு, மீன் மார்க்கெட் எதிர்புறம், சிங்காநல்லுார்.

ஆன்மிக தேடல்

மனித உடல் ஒரு கடல். அது ஒரு நுண் பிரபஞ்சம். அறிவுக்கு அகப்படாத அதிசயம் என்பார்கள். அதில் அமைதியை தேடுவதற்கான சிறந்த வழியாக, பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பது ஆன்மிகம். அதைப் பற்றிய தேடல் மிக அவசியம். அதற்கான ஒரு வாய்ப்பு வாய்த்திருக்கிறது. மவுனமாக இருந்தாலும் நம் உடல் மொழி எதையாவது உணர்த்திக் கொண்டே இருக்கும். மனதின் மொழியை அறிய, ஆன்மிக தேடல் மிக முக்கியமாக இருக்கும்.நாள்: வரும் 22ம் தேதிநேரம்: மாலை 5:30 மணி முதல் 7:00 மணி வரைஇடம்: ஆத்ம வித்யாலயம், அத்வைத வேதாந்த குருகுலம், எப் 4, எப் 5 அம்பாள் நகர் 5வது வீதி, மலுமிச்சம்பட்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ