உள்ளூர் செய்திகள்

இந்த வாரம் ஆரவாரம்

இசை நிகழ்ச்சி

கோவையைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் தனது முதல் இசை நிகழ்ச்சியான ‘வைப் வித் யூகே’ மூலம் சொந்த ஊரில் ரசிகர்களைச் சந்திக்கிறார். ரசிகர்களும் இணைந்து பாடும் வகையில் பழைய மெலடிகள், உற்சாகமான பாடல்கள் மற்றும் விருப்பப் பாடல்களுடன் 2 மணி நேர இசை நிகழ்ச்சி நடக்கிறது. இடம்: மேடை தி ஸ்டேஜ், அவிநாசி சாலை.

மருத்துவ உபகரணங்கள் கண்காட்சி

தேதி: நவ.21: ‘மெடிக்கான் எக்ஸ்போ 2026’ மருத்துவ உபகரணங்கள் கண்காட்சி நடக்கிறது. இதில் அறுவை சிகிச்சை கருவிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு உபகரணங்கள், ஆய்வக தொழில்நுட்பம், பிசியோதெரபி உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை மேலாண்மை மென்பொருட்கள் என 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. அனுமதி இலவசம். இடம்: கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகம், கோவை.

ஓவியக் கண்காட்சி

தேதி: நவ.20: கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை சார்பில், ஓவியர் சுரேஷ் ராகவன் வரைந்த 113 வனவிலங்கு ஓவியங்கள் அடங்கிய ‘வாய்ஸ் ஆப் தி வைல்ட்’ என்ற தனிநபர் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தியாவின் அரிய மற்றும் அழிந்துவரும் வனவிலங்குகளை மையமாகக் கொண்டு இந்த ஓவிய கண்காட்சி நடக்கிறது. இடம்: கஸ்தூரி சீனிவாசன் கலைக்கூடம், அவிநாசி சாலை.

விளையாட்டுப் போட்டிகள்

தேதி: நவ.18 முதல் 22 வரை: தினமலர் மற்றும் ஏ.ஜே.கே.கல்வி நிறுவனங்கள் சார்பில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி ‘திருவிழா 2026’ நடக்கிறது. இதில் கால்பந்து, கூடைப்பந்து, செஸ், வாலிபால், கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பைகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. இடம்: ஏ.ஜே.கே. கல்லுாரி விளையாட்டு மைதானம், நவக்கரை.

பயிலரங்கு

தேதி: நவ.16 முதல் 23 வரை: சரவணம்பட்டியில் ேஹண்ட் பிரஸ்டு பேட்டரி எனப்படும் கைவினை மண்பாண்டம் தயாரிக்கும் பயிலரங்கு நடக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் தங்கள் கைகளால் மண்பாண்டங்களை உருவாக்கும் அனுபவத்தைப் பெறலாம். இடம்: டி கம்யூன், சரவணம்பட்டி. தேதி: நவ.22.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை