உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவுவோர் இதைப்படிங்க!

ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவுவோர் இதைப்படிங்க!

கோவை: தீபாவளி வந்தாலே ஒளியுடனும், உற்சாகத்துடனும் மனங்கள் மலர்கின்றன. வீடுகளில் இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன; புதிய உடைகள் வாங்கப்படுகின்றன; குழந்தைகளின் முகத்தில் புன்னகை மலர்கிறது. ஆனால், சமூகத்தின் மறுபுறத்தில் இருக்கும் முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள், ஆதரவற்றோர் காப்பகங்கள் போன்ற இடங்களிலும், இந்த மகிழ்ச்சி ஒளி பரவுமா? ''பலர் தீபாவளி நேரத்தில், ஏதாவது ஒரு காப்பகத்துக்கு உதவும் நல்ல எண்ணத்துடன் வருகிறார்கள். ஆனால் அந்த உதவி பெரும்பாலும், 'உணவு வழங்குதல்' என்ற வரம்பிற்குள் மட்டுமே அடங்குகிறது. அதையும் தாண்டி அவர்களுக்கு நிறைய தேவைகள் இருக்கின்றன என்கிறார் சமூக ஆர்வலர், 'ஈரநெஞ்சம்' அறக்கட்டளை நிர்வாகி மகேந்திரன். அவர் மேலும் கூறுகையில், ''காப்பகங்களில் வாழும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் என இவர்களுக்கும் தீபாவளி என்றால் புதிய உடைகள், இனிப்புகள், பட்டாசுகள் என பல எதிர்பார்ப்புகள் இருக்கும். காப்பகங்களுக்கு உணவு கொடுப்பது நல்லது. அனைவரும் நிறைய இனிப்புகளை ஒரே நாளில் கொடுக்கின்றனர். வயோதிகர்களால் எவ்வளவு இனிப்பு சாப்பிட முடியும்? அதோடு சேர்த்து, 'உங்களுக்கு இன்னும் என்ன தேவை?' என்று கேட்டுப் பாருங்கள். அது கல்வி உதவி, சீப்பு, பவுடர், மளிகை, எண்ணெய், ஒரு விக்ஸ் டப்பா, வாஸ்லைன் கிரீம், போர்வை, டவல், அண்டர்வேர், உள்ளாடை போன்ற அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்கள், குழந்தைகளுக்கான சிறிய பரிசுகள் ஆகியவையாக இருக்கலாம். அவற்றை நேரடியாக கேட்டு தெரிந்து, பின் அவற்றை வழங்குவது அவர்களுக்கு பெரிய உற்சாகத்தை அளிக்கும். இதில்தான் இருக்கிறது உண்மையான தீபாவளி மகிழ்ச்சி,” என்றார். 'உங்களுக்கு இன்னும் என்ன தேவை?' என்று கேட்டுப் பாருங்கள். அது கல்வி உதவி, சீப்பு, பவுடர், மளிகை, எண்ணெய், ஒரு விக்ஸ் டப்பா, வாஸ்லைன் கிரீம், போர்வை, டவல், அண்டர்வேர், உள்ளாடை போன்ற அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்கள், குழந்தைகளுக்கான சிறிய பரிசுகள் ஆகியவையாக இருக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை