மேலும் செய்திகள்
6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
13-Sep-2025
செம்மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
17-Sep-2025
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே கோமங்கலத்தில், பிரேமானந்த் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள குடோனை, கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த சாகுல்அமீது,46, என்பவர் வாடகைக்கு எடுத்து கொப்பரை இருப்பு வைத்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஆக. மாதம், 16ம் தேதி ஒரு டன் கொப்பரை தேங்காய் திருட்டு போனதாக, கோமங்கலம்புதுார் போலீசாரிடம் சாகுல்அமீது புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், கொழுமத்தை சேர்ந்த சகோதரர்களான சிவா,23, சூர்யா,20, ஆகியோர், கொப்பரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 700 கிலோ கொப்பரையை பறிமுதல் செய்தனர். 300 கிலோ கொப்பரையை விற்று செலவு செய்தது தெரியவந்தது.
13-Sep-2025
17-Sep-2025