மேலும் செய்திகள்
தொழிலாளி மீது தாக்குதல்; போதை ஆசாமிகள் கைது
08-Dec-2024
கோவை; சிங்காநல்லுார், உப்பிலிபாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார், 25. இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த டிச., 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த நிலையில், அவர் உப்பிலிபாளையம் தேவேந்திர வீதியில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மூவர் சந்தோஷ் குமாரிடம் தகராறு செய்தனர். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மூவர் இரும்பு கம்பியால் சந்தோஷ் குமாரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பினர். காயமடைந்த சந்தோஷ் குமார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், சந்தோஷ் குமாரை தாக்கியது சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த ஜெகதீசன், 27, அரவிந்தன், 31, உப்பிலிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன், 54 என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் சிங்காநல்லுார் போலீசார் கைது செய்தனர்.
08-Dec-2024