உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோட்டார் திருடிய மூன்று பேர் கைது; திருட்டுப்பொருள் வாங்கியவரும் கைது

மோட்டார் திருடிய மூன்று பேர் கைது; திருட்டுப்பொருள் வாங்கியவரும் கைது

தொண்டாமுத்தூர்; தீனம்பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் மணியன், 56. மாநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், போர்வெல் மோட்டார்களை பழுதுபார்க்கும் வேலைகளை, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தில் ஒப்பந்தம் எடுத்து செய்கிறார். மாநகராட்சி 38வது வார்டில் அமைத்திருந்த போர்வெல் மோட்டார் பழுதானதால், உலியம்பாளையம், ஜெயா நகரில் தனக்கு சொந்தமான இடத்தில் வைத்திருந்தார். அங்கிருந்த பழுதான போர்வெல் மோட்டாரை சிலர் திருடிச் சென்றனர். தொண்டாமுத்துார் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் உள்ள, 'சிசி டிவி' பதிவுகளை ஆய்வு செய்தனர். திருட்டில் ஈடுபட்டது, பி.என்.புதுாரை சேர்ந்த ராஜதுரை,22, சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருண் ஜோதிவேல், 22, நரசிம்மா, 19 ஆகியோர் என்பதை கண்டறிந்தனர். போலீசார் மூவரையும் கைது செய்தனர். விசாரணை நடத்தியதில், திருடிய போர்வெல் மோட்டார்களை, வடவள்ளியில் உள்ள ரத்னபாண்டி, 44 என்பவரின் பழைய இரும்புகடையில் விற்றதும், அதேபோல், பல இடங்களில் திருடிய பொருட்களை, அவரிடம் விற்றதும் தெரியவந்தது. திருட்டு பொருட்கள் என தெரிந்தும் பொருட்களை வாங்கியதால், ரத்னபாண்டியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி