மேலும் செய்திகள்
நண்பரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
06-May-2025
சூலுார்; பட்டணத்தை சேர்ந்தவர் திலக், 23. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த கிஷோர், 25, கூலி தொழிலாளி. இருவரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். இந்நிலையில், தனது மனைவியுடன் திலக் அடிக்கடி பேசுவதை அறிந்த கிஷோர், மனைவியையும், திலக்கையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கிஷோர் மனைவி, பிரிந்து சென்றுவிட்டார். இதனால், ஆத்திரத்தில் இருந்த கிஷோர் தனது நண்பர்களான மனோஜ்குமார், மெலியா ஆகியோருடன் சேர்ந்து, திலக்கை தகாத வார்த்தைகளால் பேசி, பாட்டில் மற்றும் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர். இதுகுறித்து திலக் அளித்த புகாரின் பேரில், கிஷோர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
06-May-2025