உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வழிப்பறி செய்த மூவர் சிறையில் அடைப்பு

வழிப்பறி செய்த மூவர் சிறையில் அடைப்பு

சூலுார் : சூலுார் அடுத்த செலக்கரச்சலை சேர்ந்தவர் பழனிசாமி,45, விவசாயி. சம்பவத்தன்று இவர், கலங்கல் பகுதியில் சென்றார். அப்போது, அவரை பின் தொடர்ந்த மூன்று பேர், கத்தியால் தாக்கி,1000 ரூபாய் பணத்தை பறித்து தப்பினர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.சூலூர் எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் கலங்கல் பகுதியில் ரோந்து சென்ற போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அதில், மதுரை மாவட்டம் கோச்சடையை சேர்ந்த அன்பு செல்வம் மகன் மணிகண்டன்,22 என்பதும், பழனிசாமியிடம் பணத்தை பறித்ததும் தெரிந்தது. மேலும், மதுரையில் வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரிந்தது.கூட்டாளிகள் முத்துப்பாண்டி,20, திருச்செல்வம்,22 ஆகியோருடன் சேர்ந்து சூலூர் பகுதியில் வழிப்பறி மற்றும் இரு சக்கர வாகன திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி