உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை

பொள்ளாச்சி,:பொள்ளாச்சி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன், 35; சமையல் வேலைக்கு சென்று வந்தார். அவரது சகோதரிகள் முத்துலட்சுமி, 46, மீனாட்சி, 36. மூன்று பேரும் சீட்டு நடத்தியதுடன், குறைந்த வட்டிக்கு மற்றவர்களிடம் பணம் வாங்கி, அதிக வட்டிக்கு கொடுத்து வந்தனர். கொடுத்த பணம் திரும்ப வராததால், கடனை செலுத்த முடியாமல் தவித்தனர். செப்., 23ல் முத்துக்கிருஷ்ணன், தன் இரண்டு பெண் குழந்தைகள், சகோதரிகளுடன், கோவை மாவட்டம், பொள்ளாச்சி பி.கே.எஸ்., காலனியில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார். இச்சூழலில் செப்., 25ல் தீப்பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும், 'பொட்டாசியம்' கலந்த ரசாயன பொருட்களை தண்ணீரில் கலந்து குடித்து, மூவரும் தற்கொலைக்கு முயற்சித்தனர். அவர்களை மீட்ட உறவினர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, முத்துக்கிருஷ்ணன், முத்துலட்சுமி, மீனாட்சி மூவரும் இறந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !