உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று ஊராட்சி செயலர்கள் அதிரடி மாற்றம்

மூன்று ஊராட்சி செயலர்கள் அதிரடி மாற்றம்

சூலுார்; சூலுார் வட்டாரத்தில், அரசூர் ஊராட்சியில் செயலராக இருந்த கணேசமூர்த்தி, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருவதாகவும், அவரை இடமாற்றம் செய்ய வேண்டும், என, சமூக ஆர்வலர் ரமேஷ்குமார் முதல்வரின் தனிப் பிரிவுக்கு, கடந்த ஏப்., மாதம் புகார் அனுப்பியிருந்தார். இதையடுத்து, பி.டி.ஓ., முத்துராஜூ, சூலுார் வட்டாரத்தில் மூன்று ஊராட்சி செயலர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். அரசூரில் இருந்த கணேசமூர்த்தி, கணியூர் ஊராட்சிக்கும், கணியூரில் இருந்த ஜெகதீசன், காடுவெட்டி பாளையம் ஊராட்சிக்கும், காடுவெட்டிபாளையத்தில் இருந்த, கோபால்சாமி அரசூர் ஊராட்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி